வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு கொரோனா..! நோயாளர் விடுதியை முடியது வைத்தியசாலை நிர்வாகம்..
பொலநறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் 22ம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த விடுதி மூடப்பட்டுள்ளது.
இந்த பெண் கடந்த 10 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக கூறப்படுகிறது. மற்றொரு நோய் காரணமாக அவர் மினுவங்கொடவில் உள்ள
ஒரு உள்ளூர் மருந்து சிகிச்சை மையத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்தப் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும்,
பொலனறுவை பொது வைத்தியசாலை சிகிச்சை வழங்கியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.