மீறினால் அபராதம், 6 மாத சிறைத்தண்டணை..! அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது..

ஆசிரியர் - Editor I
மீறினால் அபராதம், 6 மாத சிறைத்தண்டணை..! அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது..

கொவிட் -19 கட்டுப்பாட்டுக்கான சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

சற்று முன்னர் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களாவன, 

1. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும்.

2. வணிக மற்றும் பணியிடங்களில் இடங்களிலும் நுழையும் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.

3. இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவௌியை பராமரிக்கப்பட வேண்டும்.

4. பணியிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஒவ்வொரு நபரின் உடல் வெப்பநிலையும் அளவிடப்பட வேண்டும்.

5. கிருமி நாசினி திரவத்துடன் போதுமான அளவு கை கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

6. உள்வரும் ஒவ்வொரு நபரின் பெயர், அடையாள அட்டை இலக்கம மற்றும் தொடர்புத் தகவலின் பதிவு பராமரிக்கப்பட வேண்டும்.

7. அதேபோல், பயணத் தடைகள், தனிமைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து போன்ற குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தவும் குறித்த வர்த்தமானி அறிவிப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு