பிரபல தனியார் வங்கியின் தலமை அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று..! ஊழியர்கள் தனிமைப்படுத்தலில்..
ஹட்டன் நஷனல் வங்கியின் தலமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
கொழும்பு -10 டீபி ஜாயா மாவத்தையில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கி கட்டிடத்தின் 19வது தளத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். என வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தளத்தில் உள்ள ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்கவேண்டாம்.
என கேட்டுள்ளதாகவும் அவர்களை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. உடனடியாக குறிப்பிட்ட கட்டிடத்தை முழுமையாக தொற்றுநீக்கலிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள வங்கி நிர்வாகம்
கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு அது சமூக பரவலாக மாறாமலிருப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.