நஷ்டத்தில் இயங்கிய கடற்றொழில் கூட்டுதாபனத்தின் 19 கிளைகில் 13 கிளைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலாபமீட்டும் நிலைக்கு வந்துவிட்டது..!

ஆசிரியர் - Editor I
நஷ்டத்தில் இயங்கிய கடற்றொழில் கூட்டுதாபனத்தின் 19 கிளைகில் 13 கிளைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலாபமீட்டும் நிலைக்கு வந்துவிட்டது..!

நஷ்டத்தில் இயங்கிவந்த கடற்றொழில் கூட்டுதாபனத்தின் 19 பிரதான விற்பனை நிலைய கிளைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கைகளால் 13 விற்பனை நிலையங்கள் இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்றுள்ளதாக அமைச்சு தொிவித்துள்ளது. 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, சுமார் 13 பிரதான விற்பனை நிலையங்கள் இலாபமீட்டும் நிலைக்கு மாறியுள்ளதுடன் 01 கிளையில் ஏற்படுகின்ற நஸ்டம் குறைக்ககப்பட்டுள்ளதுடன் 5 விற்பனை நிலையங்கள் மாத்திரமே தற்போது நஸ்டத்தில் இயங்கி வருவதாகவும் 

அவற்றையும் இலாபமீட்டும் நிலையங்களாக மாற்றவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிருஸாந்த ரத்தினவீர தெரிவித்தார். அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 

மொத்த மீன் விற்பனை 317 தொன்னாக இருந்த நிலையில் தற்போது 100 தொன்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முகாமைத்துவப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்படுன்றது.

நாடளாவிய ரீதியில் மீன் விநியோகத்தினை மேலும் இலகுபடுத்துவதற்காக 05 லொறிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன் இதுவரை 11 விற்பனை நிலையங்களும் புதிதாக திறக்கப்பட்டுள்ள நிலையில், கருவாடு இறக்குமதி தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் 

தேசிய கருவாடு உற்பத்தியை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் மேற்கொள்வதற்கு கருவாடு தயாரிக்கும் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கும் அதற்குத் தேவையான இயந்திரமொன்றை 04 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள்

 தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு