இளவரசர் மிரெட்ராட் செயிட் அல் ஹிசைன் வடமாகாணத்திற்கு விஜயம்

ஆசிரியர் - Editor I
இளவரசர் மிரெட்ராட் செயிட் அல் ஹிசைன் வடமாகாணத்திற்கு விஜயம்

ஐ.நா சபையின் கண்ணி வெடிகளை தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்பு தூதுவர் இளவரசர் மிரெட்ராட் செயி ட் அல் ஹிசைன் வடமாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றைய தினம் முகமாலை முன்னரங்க பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றப்படுவதை பார்வையிட்டதுடன், யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கும் விஜயம் மேற்கொண்டார். 

3 நாள் விஜயமாக இலங்கை வந்த இளவரசர் இன்று காலை முகாமாலை முன்னரங்க பகுதிகளில் N மற்கொள்ளப்பட்டுவரும் கண்ணி வெடியகற்றல் பணிகளையும், கிளாலி பகுதியில் மேற்கொள்ளப்ப ட்டுவரும் கண்ணி வெடியகற்றல் பணிகளையும்  நேரில் பார்வையிட்டார். இதன்போது மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம், மற்

றும் இராணுவத்தினர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இராணுவம் கண்ணி வெடிகளை அகற் றுவரை நேரில் பார்வையிட்ட இளவரசர் கண்ணிவெடிகள் தொடர்பான விளக்கத்தை கேட்டதுடன், த மிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட கண்ணி வெடிகளை இளவரசர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்

தவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து யாழ்.சுண்டிக்குளியில் உள்ள ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கும் விஜயம் செய்து அங்கு அவயவங்களை இழந்தவர்களு டன் பேசினார். இதன்போது செயற்கை அவயவங்களை உருவாக்குவதற்காக 13.3 மில்லியன் ரூபாய் பெ றுமதியான மூலப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு