யாழ்.வடமராட்சி கிழக்கில் இருந்து இந்தியாவரை சென்றுவந்தனர், இழுவை படகிலும் பயணம்..! 79 போில், 9 பேருக்கு உடனடி பீ.சி.ஆர் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் இருந்து இந்தியாவரை சென்றுவந்தனர், இழுவை படகிலும் பயணம்..! 79 போில், 9 பேருக்கு உடனடி பீ.சி.ஆர் பரிசோதனை..

இந்திய மீனவர்களுடன் நடுக்கடலில் நெருக்கமாக பழகியதுடன், இலங்கை எல்லைக்குள்ளும் அழைத்துவந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 79 போில் 9 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 70 பேர் வாடிகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பணிப்பாளர் கூறியிருக்கின்றார். 

இதேவேளை வெளிமாவட்டங்களில் இருந்து கடலட்டை பிடிப்பதற்கு வருவதாக காட்டிக் கொண்டு இந்திய கடத்தல்காரர்களுடன் நெருக்கமாக உறவை பேணும் வெளிமாவட்ட மீனவர்களால் வடமாகாணம் குறிப்பாக யாழ்.மாவட்டம் கொரோனா அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், 

குறிப்பாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் குறித்த மீனவர்கள் இந்திய இழுவை படகுகளில் தங்கியிருந்ததுடன், தமிழகம்வரை சென்றுவந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர்களாலேயே யாழ்.மாவட்டத்திற்குள் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள்

கொண்டுவரப்படுவதாக குற்றஞ்சாட்டும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இவ்வாறானவர்களை தமது நிலங்களில் இருந்து வெளியேற்ற பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரதுறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு