யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களுக்கான வாடகை அதிகரிப்பு..! மாநகரசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோரும் யாழ்.வணிகர்கழகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களுக்கான வாடகை அதிகரிப்பு..! மாநகரசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோரும் யாழ்.வணிகர்கழகம்..

யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களுக்கான வாடகை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக யாழ்.வணிகர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் மாநகர வணிகர்கள் யாழ்.மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். 

குறித்த சந்திப்பு யாழ்.வணிகர்கழக கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்றுள்ளது. யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களிற்கு தற்போது சபையினால் அதிகரிக்கப்பட்டுள்ள தொகையில் இருந்து இந்த மாதம் முதல் 100 வீதம் அதிகரித்த பெறுமதியாக கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களிற்கான தடையின் காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பினை குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வணிகர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த அதிகரிப்பானது மாநகர சபையின் கோரிக்கையின் பெயரில் மதிப்பீட்டுத் திணைக்களம் மேற்கொண்டமையினால் ஏற்பட்டுள்ளது. இந்த பெறுமதி கொரோனா காலத்திற்கு முந்தியதாக இருக்கலாம். அதனை மீண்டும் பெறுமதி கணித்தாள் குறைவடையக் கூடும்.

இதே நேரம் பல கடைகள் உரிமையாளர்கள் வேறாகவும் உள்ளது. இதனால் அதனை தற்போது நடாத்துபவர்களின் பெயரிற்கு மாற்றுவதற்கு அவர்கள் விண்ணப்பித்த காலத்தின் வாடகையினை பெறுவதோடு 20 ஆண்டுகால வாடகை அல்லாமல் முன்பு 15 ஆண்டுகால வாடகையுடனும் 

வழங்கியுள்ளதனால் அவ்வாறே 15 ஆண்டுகால வாடகையுடன் வழங்க கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் வர்த்தகர்களிற்காக குரல்கொடுக்க முன்வர வேண்டும் என வணிகர் கழக உபதலைவர் ஜெயசேகரம் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கைக்கு சட்டபூர்வமான தடைகளிற்கு அப்பாற்பட்ட அனைத்து விடயங்களிற்கும் தமது அமைப்பு ஆதரவு வழங்கும் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் கூறுகையில்,

மாநகரத்தில் இயங்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் 384 கடைகள் மாநகர சபைக்குரியவை. இவற்றிற்கு உள்ளூராட்சி சபைச் சட்டத்தின் பிரகாரம் 3 ஆண்டுகளிற்கு ஒரு முறை பெறுமதி கணிப்பிட வேண்டும். இருப்பினும் 2010ஆம் ஆண்டிற்கு பின்பு 

அதாவது 10 ஆண்டுகளாக அந்தப் பணி இடம்பெறவில்லை. அதாவது இரண்டு சந்தர்ப்பம் தவற விடப்பட்டுள்ளது. அதனாலேயே இந்த பெறுமதி அதிகமாக தெரிகின்றது.அத்தோடு வணிகர் கழகத்தினர் குறிப்பிட்டதனைப் போன்று கோரோனாவிற்கு முந்திய கணிப்பீட்டாள் வாடகை அதிகரித்தது 

என்ற விடயம் சரியாக இருப்பின் மீள் கணிப்பீடு தேவை இல்லை. ஏனெனில் சபையின் 384 கடைகளில் தற்போது 185 கடைகளிற்கு மட்டுமே புதிய மதிப்பீடு கிடைத்துள்ளது. எஞ்சிய 200ற்கும் மதிப்பீட்டுப் பணிகள் தற்போதுதான் இடம்பெற்று வருகின்றது. அதனை மாநகர சபை மேற்கொள்வது கிடையாது. 

அது ஒரு தனியான திணைக்களம். இதேநேரம் உரிமை மாற்றம் தொடர்பிலே எந்த வர்த்தகரும் மற்றவர்களில் தங்கி வாழாது சொந்தமாக நிற்க வேண்டும் என்பதே எமது விருப்பமும் உள்ளதனால் உரிமை மாற்றம் செய்வதற்கான அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அந்த நிலையில் உள்ள 207 கடைகளையும் தற்போதைய உரிமையாளர்களிற்கே வழங்க வேண்டும் என தீர்மானித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உரிமை மாற்றம் செய்ய கடைகளுக்கு புதிய தொகைக்கு ஒரு கால அவாசம் அல்லது பகுதி பகுதியான கொடுப்பனவு 

என்னும் விடயத்தை ஆராயலாம் என்றார். இதன்போது கருத்துரைத்த மாநகர சபை உறுப்பினர் மு.ரெமிடியஸ், கடை உரிமம் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான முடிவும் இல்லை. ஆனால் வர்த்தகர்களின் நலனிற்காக எடுக்கும் எந்த முடிவிற்கும் நாம் ஆதரவளிப்போம். 

எதிராக இருந்தாள் எதிர்ப்போம். இதுவே எமது 12 பேரின் நிலைப்பாடு என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு