காயமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு..! ஒருவர் ஆபத்தான நிலையில், பேருந்து சாரதியின் கவனயீனம் விபத்துக்கு காரணம், சாரதி கைது..(2ம் இணைப்பு)

ஆசிரியர் - Editor

ஹட்டன் - டயகம போடைஸ் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ள நிலையில், பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணமான பேருந்து போடைஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் இன்று காலை 7 மணிக்கு இடம்பெற்றது. 

சம்பவத்தில் 24 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக காயமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. குறித்த விபத்துக்கு சாரதியின் கவனயீனமே காரணம் என கூறப்படுகின்றது. 

நேரடி விசாரணைகளின்போதும் குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 

ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Radio