கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகீழாக கவிழ்ந்து கோர விபத்து..! 24 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 30 பேர் படுகாயம், இன்று காலை சம்பவம்..

ஆசிரியர் - Editor

கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகிய பேருந்து பள்ளத்தில் குடைசாய்ந்ததில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து சம்பவம் இன்று காலை 7 மணியளவில் ஹட்டன் -டயகம பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகிழாக கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்போது 24 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 

ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யபட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Radio