50 வருடங்களுக்கும் மேலாக பாவனையில் இருந்த வீதியை காணவில்லை..! 22 குடும்பங்களின் முறைப்பாட்டுக்கு செவிசாய்க்காத பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
50 வருடங்களுக்கும் மேலாக பாவனையில் இருந்த வீதியை காணவில்லை..! 22 குடும்பங்களின் முறைப்பாட்டுக்கு செவிசாய்க்காத பொலிஸார்..

50 வருடங்களுக்கும் மேலாக மக்களின் பயன்பாட்டிலிருந்த பாதையை தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் மூடிய நிலையில் குறித்த வீதியை நம்பியிருக்கும் 22 குடும்பங்கள் பாதை இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் சண்டிலிப்பாய் ஜே 143 பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவில் புனரமைப்பு செய்யப்பட்ட குறித்த வீதியின் 

புனரமைப்பு பணிகள் இடைநடுவில் அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வீதியை போக்குவரத்திற்காக 22 குடும்பங்கள் பயன்படுத்தும் நிலையில்,

ஒரு கூட்டம் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக வீதியை மூடி அடைத்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் தமது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் அந்தரிக்கின்றனர். 

குறித்த விடயம் தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த தவிசாளர் பொலிஸாருடன் மணிக்கணக்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் 

பாதையை தற்காலிகமாகத் திறப்பதற்கு ஒத்துழைக்குமாறு கூறினர். குறித்த சம்பவத்தில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் 

குறித்த வீதியை கபூட்டுவதற்கும் பொலிஸாரும் உடந்தையா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு