மலக்குழியில் தவறி விழுந்த 14 வயது சிறுமி விஷவாயு தாக்கி மரணம்..!

ஆசிரியர் - Editor
மலக்குழியில் தவறி விழுந்த 14 வயது சிறுமி விஷவாயு தாக்கி மரணம்..!

பாதுகாப்பற்ற மலக்குழியில் விழுந்து 14 வயதான சிறுமி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்திருக்கின்றது. 

மாவனெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெல - ஹிஹூல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த சிறுமி அந்த பகுதியில் துப்பரவு பணிகளில் ஈடுப்பட்டிருந்த போது மலசலகூட கொங்கிரீட் பரப்பின் ஒரு பகுதி உடைந்ததிலேயே சிறுமி தவறுதலாக உள்ளே விழுந்துள்ளார்.

சிறுமியை மாவனெல்ல வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர். 

மாவெல - ஹிஹூல பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

சிறுமியின் பிரேத பரிசோதனைகள் மாவனெல்ல வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட போது நச்சு வாயுக்களை சுவாசித்ததன் மூலம் சிறுமி உயிரிழந்திருக்கலாமென வைத்தியர்கள் குறிப்பிட்டனர். 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Radio