யாழ்.மத்திய பேருந்து நிலைய மலசலகூடம் இரவில் பூட்டப்படுவது ஏன்..? மேதாவி அதிகாரிகளால் அந்தரிக்கும் மக்கள்..

ஆசிரியர் - Editor
யாழ்.மத்திய பேருந்து நிலைய மலசலகூடம் இரவில் பூட்டப்படுவது ஏன்..? மேதாவி அதிகாரிகளால் அந்தரிக்கும் மக்கள்..

யாழ் பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள பொது மலசல கூடம் இரவில் பூட்டப்படுவதால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

அரசாங்கத்தின் பல மில்லியன் ரூபா செலவில் பெதுமக்களுக்காக அமைக்கப்பட்ட குறித்த பொது மலசல கூடம் இரவு 8.30மணிக்கு பின்னர் பூட்ப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பின்னரே திறப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து பெரும்பாலும் இரவு 9 மணிக்கு பின்னரே இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் அதிகம் வருகை தருகின்ற நிலையில் கொழுப்பில் இருந்து வருகைதரும் பேருந்துகள் அதிகாலை 2மணிதொடக்கம் 4 மணிவரையான நேரங்களிலே 

யாழ்.பஸ் தரிப்பிட தந்தை வந்தடைகிறது. இவ்வாறு நீண்ட தூர பயணத்தின் பின் அதிகாலை வேளை யாழ் பஸ் நிலையத்தை வந்தடையும் பயணிகள் பஸ் தரிப்பிட பொது மலசல கூடம் பூட்டப்பட்டிருப்பதால் பயணிகள்பல்வேறு 

அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு பெண்களே அதிம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆகவே மக்களுக்கு பொறுப்பானதும் பாதுகாப்பான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரிகள் 

குறித்த விடயம் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Radio