வெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

ஆசிரியர் - Admin
வெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

வெல்லவாய - எல்ல பிரதான வீதியின் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவற்காக வந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர், குறித்த இடத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு தீயினை அணைத்த காரணத்தால் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

குறித்த முச்சக்கரவண்டி தீப்பற்றி எரியும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

Radio