மாணவர்களை பயன்படுத்தி மலசலகூடத்தை துப்புரவு செய்யும் அதிபர்கள்..! யாழ்.வலிகாமம் வலய பாடசாலைகள் சிலவற்றில் நடக்கும் அசிங்கம், பெற்றோர் போர்க்கொடி..

ஆசிரியர் - Editor I
மாணவர்களை பயன்படுத்தி மலசலகூடத்தை துப்புரவு செய்யும் அதிபர்கள்..! யாழ்.வலிகாமம் வலய பாடசாலைகள் சிலவற்றில் நடக்கும் அசிங்கம், பெற்றோர் போர்க்கொடி..

யாழ்.வலிகாமம் வலய பாடசாலைகள் சிலவற்றில் மாணவர்களை பயன்படுத்தி மலசலகூடம் துப்புரவு செய்யப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவே தயங்குவதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் சில பெற்றோர் தகவல் தருகையில், மாணவர்களை பயன்படுத்தி பாடசாலையின் உட்புற, வெளிப்புற சூழல் துப்புரவு செய்யப்படுவதுடன், சில பாடசாலைகளில் மாணவர்களை பயன்படுத்தி மலசலகூடம் துப்புரவு செய்யப்படுகின்றது. 

இதனால் மாணவர்களுக்கு கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. இந்த வேலைகளைச் செய்துவிட்டு பிள்ளைகளால் எப்படிக் கற்றல் செயற்பாடுகளில் முழு மனதோடு ஈடுபட முடியும்? இப்படியான வேலைகளை செய்வதற்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்.

என சுட்டிக்காட்டியிருக்கும் பெற்றோர். இந்த விடயத்தை தாம் பெற்றோர் சந்திப்பில் பல தடவைகள் கூறியுள்ளதாகவும். ஆனாலும் அதிபர் எமது கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. என கூறியிருக்கின்றனர். மேலும் பாடசாலை நிர்வாகத்தின் இப்படியான செயற்பாடுகளால் 

மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு மறுக்கின்றனர். இதனால் அவர்களது கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படுமோ என அச்சமாகவுள்ளதாக தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 

குறித்த விடயம் தொடர்பில் மேல்மட்ட ங்களுக்கு தமது கோரிக்கைகளை முன் வக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு