நல்லுார் பிரதேசசபை செயலாளர் மீது தாக்குதல்..! தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய கோப்பாய் பொலிஸார் தரகர் வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor

திருநெல்வேலி சந்தையில் கடை ஒன்று தொடர்பில் உருவான தர்க்கத்தினால் நல்லுார் பிரதேசசபை செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பல் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 

குறித்த நபருடன் சமாதானமாக போகுமாறு கோப்பாய் பொலிஸார் பிரதேசசபை செயலாளருக்கு அழுத்தம் கொடுப்பதாக தொியவருகின்றது. 

தாக்குதல் நடத்திய நல்லுார் அரசடி வீதியை சேர்ந்த நபருடைய உறவினரின் கடை ஒன்று திருநெல்வேலி சந்தைக்குள் காணப்படுகின்றது. 

அது அது தொடர்பில் எழுந்த தர்க்கத்தை தொடர்ந்து குறித்த நபர் சபை செயலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோது, 

பிரதேசசபை ஊழியர்கள் அவரை பிடித்து வைத்ததுடன், கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் கோப்பாய் பொலிஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்காததுடன், 

செயலாளரை சமாதானமாக போகுமாறு வற்புறுத்துவதாகவும் அழுத்தங்களை கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது. 

Radio