விவசாய அமைச்சின் வேலைவாய்ப்புக்களில் யாழ்.விவசாயிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை..! அமைச்சர் உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor
விவசாய அமைச்சின் வேலைவாய்ப்புக்களில் யாழ்.விவசாயிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை..! அமைச்சர் உத்தரவாதம்..

யாழ்.மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி வெங்காயம், மிளகாய் மற்றும் உருளைகிழக்கு இறக்குமதியை அடுத்த 3 வருடங்களின் பின் முற்றாக நிறுத்துவதுடன், குறித்த பயிர்களை செய்கை பண்ணுவதற்காக விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். 

மேற்கண்டவாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மாவட்ட செயலகத்தில் விவசாய அமைச்சு அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், விவசாயிகளை சந்தித்து பேசியிருந்தார். 

இதன்போதே அமைச்சர் மேற்படி உத்தரவாதத்தை வழங்கியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், விவசாய அமைச்சினால் விடுக்கப்படும் அரச வேலைவாய்ப்புக்களில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை

வழங்க நவடிக்கை எடுக்கப்படும். மேலும் 7 லட்சம் மெற்றிக் தொன் பசளை விவசாயிகளுக்கு நிர்ணய விலையில் வழங்குவதுடன் இயற்கை விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கூறியுள்ளார். 

Radio