வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் பாய்ந்து கோர விபத்து..! 3 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor
வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் பாய்ந்து கோர விபத்து..! 3 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்..

வேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் 3 பேர் உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து நுவரெலியா - அட்டன் பத்தனை பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருதாவது, 

அக்கரபத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவொன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பஸ் தரிப்பிடத்தில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனது. 

அவ்வேளையில் பஸ் தரிப்பிடத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரும், பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரும் ஆட்டோவில் பயணித்த 3 பேருமாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தால் பஸ்தரிப்பிடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது, திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Radio