சுமந்திரன், சிறீதரன், குணாளன் மீது தமிழரசு கட்சியின் ஒழுக்காற்று குழு நடவடிக்கை எடுக்கும்..! சிரேஷ்ட உப தலைவர் சீ.வி.கே..

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவஞானம் சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக கூறியிருக்கும் தமிழரசு கட்சியின் மூத்த துணை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கின்றார். 

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா,எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே 

சி.வி.கே.சிவஜானம் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவர் அந்த கடிதத்தினை அனுப்பியுள்ளார். அந்த கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, 

அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் சமர்ப்பித்து, விடையங்களை ஆராய்ந்து, அந்த குழுவில் யார் யார் இருக்கின்றார்கள் என ஆராய்ந்து தீர்மானித்து அது பரிசீலிக்கப்படும்.ஆனால் அது மட்டும் இல்லை ஏற்கனவே வேறு பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது. சுமந்திரன், சிறிதரன் மற்றும் குணாளனுடைய முறைப்பாடுகள் என பல முறைப்பாடுகள் இருக்கின்றது. 

எனவே இந்த விடையங்கள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு