யாழ்.அச்செழு பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்செழு பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்..!

யாழ்.அச்செழு பாடசாலையில் ஆசிரியர்களுக்கும் உப அதிபருக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடான சூழல் காணப்பட்ட நிலையில் பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த பாடசாலையில் உப அதிபருக்கும் ஆசிரியர்களுக்குமிடையில் தொடர்ச்சியாக முரண்பாடான நிலை காணப்பட்டுவந்த நிலையில் இரு தரப்பும் தங்கள் நியாயங்களை கூறிவந்திருந்ததுடன், 

உயர் மட்டங்களுக்கும் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை கூறிவந்திருந்த நிலையில், அமைச்சர் மட்டத்திற்கு குறித்த சண்டை சென்றிருந்த நிலையில் குறித்த பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

அச்சுவேலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சிறப்பான சேவையை வெளிப்படுத்திய வே.குணசீலன் என்பவர் தற்போது அச்செழு பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

இதேவேளை முரண்பாட்டில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்பான உப அதிபர் பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக Jaffnazone இணையதளம் பல தடவைகள் வெளிப்படுத்தியிருந்தோம். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு