யாழ்.நெல்லியடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருடன் மோதிய மினி பஸ்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருடன் மோதிய மினி பஸ்..!

யாழ்.நெல்லியடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது மினி பஸ் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

குறித்த விபத்து சம்பவம் சற்று முன்னர் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த தனியார் போக்குவரத்து மினிபஸ் முடக்காட்டுச் சந்தியில் 

தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட காருடன் மோதி விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான கார் வைத்தியசாலையில் தனது சேவையை ஆற்றவந்த வைத்தியருடையது 

எனத் தெரியவந்துள்ளது. நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு