SuperTopAds

பெற்றோரின் அசண்டையீனம்..! கிறைன்டருக்குள் கையை விட்ட 3வயது சிறுவன், 8 மணிநேரம் போராடி சிறுவனின் கையை காப்பாற்றிய மருத்துவர்கள்...

ஆசிரியர் - Editor I

கிறைன்டருக்குள் (அரைக்கும் இயந்திரம்) கையை வைத்த 3 வயது சிறுவனின் கை சிதைந்துபோன நிலையில் சுமார் 8 மணித்தியாலங்கள் போராடிய மருத்துவர்கள் கையை உருப்படியாக மாற்றியிருக்கின்றனர். 

சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம், வீட்டிலிருந்தவர்கள் வடை சுடுவதற்கு ஆயத்தம் செய்துள்ளனர். இதன்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயதான சிறுவன் கிறைன்டருக்குள் கையை வைத்துள்ளான். 

இதனால் கை சிதைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 8 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக போராடிய மருத்துவர்கள்

சிறுவனின் கையை உருப்படியாக மாற்றியிருக்கின்றனர். பெற்றோர் மற்றும் வீட்டிலிருந்தவர்களின் அசண்டையீனத்தால் சிறுவனின் வலது கையில் பல இடங்களில் தசை கிளிக்கப்பட்டு எலும்பு உடைந்துள்ளதாக கூறும் வைத்தியர்கள், 

மிகுந்த போராட்டத்தின் மத்தியிலேயே சிறுவனின் கையை காப்பாற்ற முடிந்ததாக கூறியுள்ளதுடன், சிறுவனின் பெற்றோரை அழைத்து மருத்துவர்கள் கடுமையாக கடிந்துள்ளனர்.