உயிருடன் இருந்தவரை உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதா..? யாழ்.பருத்துறை ஆதார வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ள மக்களால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
உயிருடன் இருந்தவரை உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதா..? யாழ்.பருத்துறை ஆதார வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ள மக்களால் பதற்றம்..

யாழ்.பருத்துறை ஆதார வைத்தியசாலையை மக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாக தொியவருகின்றது. 

நெல்லியடி - இராஜ கிராமத்தை சேர்ந்த ஒருவர் மூட்டை துாக்கும் தொழிலை செய்துவந்த நிலையில் வழக்கம்போல் இன்று மூட்டை துாக்கும்போது மயங்கி விழுந்துள்ளார். 

இதனையடுத்து குறித்த நபர் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சடலம் பிரேத அறைக்கு அனுப்பபட்டுள்ளது. பிரேத அறைக்கு சென்ற உறவினர்கள் குறித்த நபர் உயிருடன் இருப்பதாக கூறியிருக்கின்றனர். 

இதனையடுத்து பிரேத அறையிலிருந்து உடலை வைத்தியசாலைக்குள் உறவினர்கள் கொண்டு சென்றிருக்கின்றனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையை முற்றுகையிட்ட மக்களால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக கருத்து தொிவித்துள்ள வைத்தியசாலை நிர்வாகம்..

குறித்த விடயம் தொடர்பாக விளக்கியிருக்கும் வைத்தியசாலை நிர்வாகம், பொதுமக்களின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்திருப்பதுடன், 

1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுவரும்போதே அவர் உயிரிழந்துவிட்டதாகவும், பிரேத அறையிலிருந்து உடலை அவசர சிகிச்சைக்கு தள்ளுவண்டியுடன் 

இழுத்துவந்த உறவினர்கள் தகராறு புரிந்ததாகவும், மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என கூறியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு