SuperTopAds

பகுதி நேர வேலையாக தபால் உறையில் வைத்து கஞ்சா வியாபாரம்..! தபால் விநியோக ஊழியர் சிக்கினார், 24 பொதிகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
பகுதி நேர வேலையாக தபால் உறையில் வைத்து கஞ்சா வியாபாரம்..! தபால் விநியோக ஊழியர் சிக்கினார், 24 பொதிகள் மீட்பு..

பகுதி நேர வேலையாக கஞ்சா வியாபாரம் செய்துவந்த தபால் ஊழியர் ஒருவர் தபால் உறையில் பொதி செய்யப்பட்ட 24 கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

புஸல்லாவ பகுதியில் கடந்த 15 வருடங்களிற்கும் மேலாக தபால் விநியோகஸ்தராக கடமையாற்றி வரும் இவர், கடந்த 5 வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

சந்தேகநபர் தொடர்பாக புஸல்லாவ பொலிசாருக்கு நீண்டகாலமாக கிடைத்து வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிசார் அவரை கண்காணித்து வந்தனர். 

கடந்த சனிக்கிழமை புஸல்லாவ நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து புஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக ஹெமகுமாரவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர், 

சந்தேகநபரை கைது செய்தனர்.அவர் நீதிமன்ற அனுமதியுடன் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.