அரசியல் பின்புலத்துடன் அதிகார மீறல்..! துாக்கி எறியப்படும் நிலையில் உப அதிபர், பாதுகாப்பு தரப்பு மற்றும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் உப அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான முரண்பாட்டையடுத்து உப அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொியவருகின்றது. 

பிரதி அதிபரின் செயற்பாடுகள் தொடர்பாக வடமாகாண கல்வி உயர் அதிகாரிகளுக்கு எழத்து மூலம் தெரியப்படுத்தியும் அரசியல் தலையீடுகள் காரணமாக அவர் மீதான நடவடிக்கைகள் மந்த கதியில்

இடம்பெற்றுவந்திருந்ததாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், குறித்த பாடசாலை தொடர்பில் அப்பாடசாலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத்து மூலம் 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கல்வி உயர் அதிகாரிகளுக்கு இறுதியாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார் மற்றும் வடக்கு கல்வியமைச்சின் 

உயர் அதிகாரிகள் குழு கடந்த புதன் கிழமை பாடசாலைக்கு நோில் விஜயம் செய்து நிலமைகளை ஆராந்துள்ளனர். இதன்போது சர்ச்சைகளுக்கு காரணமான பிரதி அதிபர் பாடசாலையில் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில் உடனடியாக அவர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அவரிடம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் வருகை தந்த உயர் அதிகாரிகளால் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வழங்கப்பட்ட இடமாற்றத்தை ஏன் பொறுப்பேற்கவில்லை என வினவப்பட்டிருப்பதுடன், உடனடியாக குறித்த இடத்தை பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டார். 

பாடசாலையில் நிலவிவரும் பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

விசேடமாக பாடசாலையின் இலச்சினை பொறிக்கப்பட்ட பாடசாலையின் முகநூல் கணக்கு பிரதி அதிபரின் ஆதரவாளர்களால் செயற்படுத்தப்படுவதாகவும் இதில் ஆசிரியர்கள் தொடர்பில் 

இழிவான வார்த்தைப் பிரயோகங்கள் பிரயோகிக்க்கப்படுவது தொடர்பாகவும் பாதுகாப்பு தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோப்பாய் கோட்டப்பிரிவில் குறித்த பிரதி அதிபரை பல பாடசாலைகள் ஏற்கப் பின்னடித்து வரும் நிலையில், குறித்த பிரதி அதிபர் தொடர்பில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அறியக்கிடைக்கிறது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்து எமது செய்திப்பிரிவு அம்பலப்படுத்தியிருந்ததுடன் இந்த விடயத்தை தொடர்ந்தும் அவதானித்து வரும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு