147 வருடங்கள் பழமையான யாழ்.மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முற்றாக மூடப்படும் நிலையில்..!

ஆசிரியர் - Editor I
147 வருடங்கள் பழமையான யாழ்.மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முற்றாக மூடப்படும் நிலையில்..!

யாழ்.வலிகாமம் வடக்கு - மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இடம்பெயர்ந்து தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவந்த நிலையில் தற்போது மூடப்படும் அபாயம் எழுந்துள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு முன்னாயத்த கூட்டத்திலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 147 வருட கல்விப் பாரம்பரியத்தை கொண்ட பாடசாலை இடப் பெயர்வின் பின் யாழ் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில்

பல வருடங்களாக இயங்கி வருகிறது. சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் குறித்த பாடசாலையில் அடிப்படை வசதிகள் இன்றியே மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த பாடசாலை நடாத்தும் பகுதி சுகாதார ஏற்பாடுகள் போதாது எனவும் 

அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் குறித்த காணியில் இருந்து பாடசாலையை அகற்றுமாறு உரிமையாளரால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை இயங்கும் கட்டடத்தின் உரிமையாளர் பாடசாலைச் சமூகத்திற்கு அறிவுறுத்தல் 

வழங்கிய நிலையில் அவர்கள் செய்வதறியாது சங்கடத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே தமது பாடசாலை தொடர்ந்தும் இயங்க கூடிய வகையில் மாற்று வழி ஒன்றை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு