“சீமை கருவேல” மரங்களை அழிக்க அதிகாரமளிக்கப்பட்ட உப குழு அமைக்க தீர்மானம்..! யாழ்.மாவட்டத்தில் சிறப்பு வேலைத்திட்டம் விரைவில்..

ஆசிரியர் - Editor I
“சீமை கருவேல” மரங்களை அழிக்க அதிகாரமளிக்கப்பட்ட உப குழு அமைக்க தீர்மானம்..! யாழ்.மாவட்டத்தில் சிறப்பு வேலைத்திட்டம் விரைவில்..

யாழ்.நகரின் கரையோர பகுதிகள் மற்றும் தீவக பகுதிகளில் அதிகளவில் சீமை கருவேல மரங்களினால் நிலத்தடி நீர் அருகும் ஆபத்தை தவிர்ப்பதற்காக குறித்த மரங்களை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு முன்னாயத்த கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மேற்படி விடயம் கருத்தில் எடுக்கப்பட்டு சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த தாவரம் யாழ் பிரதேசங்களில் அதிகம் வளர்ந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் குறித்த தாவரத்தின் வளர்ச்சி அதிகமாக பரம்பலடையும் சூழ்நிலையில் 

அதனால் உண்டாகும் ஆபத்துக்களை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மற்றும் தீவக பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டியதற்கமைய  குறித்த தாவரத்தின் பரம்பலை கட்டுப்படுத்துவதற்கும் 

தாவரம் அதிகம் வளர்ந்துள்ள பிரதேசங்களில் ஏற்படுகின்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்கும் முகமாகவும் யாழ்.பிரதேச செயலாளர் தலைமையில் சீமை கருவேல மரங்களை ஒழிக்கும் அதிகாரமுள்ள உப குழு அமைக்கப்படவுள்ளது. 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு