மீண்டும் நில அதிர்வு..! உறுதி செய்தது அரசாங்கம், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் விரைவு..

ஆசிரியர் - Editor
மீண்டும் நில அதிர்வு..! உறுதி செய்தது அரசாங்கம், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் விரைவு..

கண்டி - திகன பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் புவிச்சரிதவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சஜ்ஜன அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது திகன, அம்பாக்கோட்டை பிரதேசத்தில் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்று நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர். என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கண்டி - திகன பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் போன்ற அதிவு உணரப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 29ம் திகதி இரவும் இதேபோல் அதிர்வு ஏற்பட்டதோடு அது நிலநடுக்கமா இல்லையா என்ற ஆய்வுகள் இடம்பெற்று வருகிற நிலையிலேயே 

மற்றுமொரு அதிர்வு ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Radio