சாவகச்சோி வைத்தியசாலையில் குழந்தை வைத்திய நிபுணர் இல்லை..! பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி வைத்தியசாலையில் குழந்தை வைத்திய நிபுணர் இல்லை..! பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் மக்கள்..

சாவகச்சோி வைத்தியசாலையில் குழந்தை வைத்திய நிபுணர் இல்லாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டிருக்கின்றனர். 

பெருமளவு மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலையான சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பூநகரி, பளை, கிளாலி, முகமாலை பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். 

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய குழந்தை வைத்திய நிபுணர் பணியிட மாற்றம் பெற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில் 

அவருக்கு பதிலீடாக எந்தவொரு வைத்தியரும் நியமிக்கப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கேட்டபோது 

குறித்த வைத்திய நிபுணர் மத்திய அரசாங்கத்தின் பணி இடமாற்றத்துக்கு அமைய இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் அவருக்கு பதிலீடாக ஒருவரை நியமிக்குமாறு ச

ம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு