யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்திக்கு 300 மில்லியன் மானியம் வழங்கும் இந்தியா..! ஒப்பந்தம் அமைச்சரவைக்கு..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

மேற்கண்டவாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். மேலும் இரண்டு வாரங்களுக்குள் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் சுற்றுலா அமைச்சில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் 

அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இரு தரப்பிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்தின் 

மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பாலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கைக்கு 

300 மில்லியன் ரூபா மானியம் வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு