எனக்கு தொியாமல் அணுவும் அசைய கூடாது என்கிறார் அங்கஜன்..! கவனம் இது ஜனாதிபதிக்கு தொியாம பாத்துக்கங்க - மக்கள்..

ஆசிரியர் - Editor I
எனக்கு தொியாமல் அணுவும் அசைய கூடாது என்கிறார் அங்கஜன்..! கவனம் இது ஜனாதிபதிக்கு தொியாம பாத்துக்கங்க - மக்கள்..

யாழ்.மாவட்டத்தில் தனக்கு தொியாமல் எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் மேற்கொள்ளப்படகூடாது. என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் மாவட்ட செயலகத்திற்கு எழுத்துமூலம் கடிதம் வழங்கியுள்ளாராம். 

இதனை சண்டே ரைம்ஸ் செய்தியாக பிரசுரித்துள்ளதுடன், மாவட்ட செயலகத்திற்கு அனுப்பபட்ட கடிதம் ஆதாரமாக உள்ளதெனவும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்திதிட்டங்கள் குறித்த விபரங்களை தருமாறு 

அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்விடுத்துள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமைச்சுகளும் திணைக்களங்களும் அனுமதி வழங்கும் அனைத்து திட்டங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் எனது இணை அனுசரணையுடனேயே நடைமுறைப்படுத்தவேண்டும் 

என அங்கஜன்ராமநாதன் தெரிவித்தார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. எனது அனுமதி இல்லாமல் எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் பொருத்தமான 

அலுவலக இடமொன்றை ஒதுக்கிதருமாறு பிரதேச செயலாளரை அங்கஜன் ராமநாதன் கேட்டுக்கொண்டுள்ளார், இது தொடர்பில் தனது தந்தையை தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த சர்ச்சை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த அமைச்சர் டக்களஸ் தேவானந்தா குறிப்பிடுகையில்...

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் நான் இருக்கிறேன். அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் திட்டங்களை நான் இங்கே செயற்படுத்துவேன். அதனை தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இங்கே இல்லை. என பதிலளித்திருக்கின்றார். 

மேலும் இந்த விடயம் தொடர்பாக கருத்து தொிவித்துள்ள வடமாகாணசபை முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா..

மாவட்ட அபிவிருத்தி குழு அந்த மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கான ஒரு அமைப்பு மட்டுமே. அந்த அபிவிருத்தி குழுவின் இணை தலைவருக்கோ, மாவட்ட செயலருக்கோ தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது.

மேலும் ஒரு அமைச்சர் அல்லது அமைச்சுக்கு அரசியலமைப்பு ரீதியாகவும், சட்ட ஏற்பாடுகள் ஊடாகவும் வழங்கப்பட்டிருக்கும் அதிகார எல்லையை மீறி மாவட்ட அபிவிருத்தி குழு முடிவுகளை எடுக்க முடியாது. என குறிப்பிட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு