தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு 3 ஆசனங்கள், விருப்பு வாக்கில் அங்கஜன் இராமநாதன் முதலிடம், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், டக்ளஸிம் வெற்றி..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு 3 ஆசனங்கள், விருப்பு வாக்கில் அங்கஜன் இராமநாதன் முதலிடம், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், டக்ளஸிம் வெற்றி..

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருக்கின்றது. இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றிருக்கின்றது. 

இதன்படி 36300 விருப்பு வாக்குகளை பெற்று அங்கஜன் இராமநாதன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டார். அதேபோல் 32156 விருப்பு வாக்குகளை பெற்று டக்ளஸ் தேவானந்தா ஈழமக்கள் ஜனநாயக கட்சிசார்பில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டார். 

31658 விருப்பு வாக்குகளை பெற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டார். 21554 வாக்குகளை பெற்று சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றார். 

இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பில் 35884 வாக்குகளை பெற்று சி.சிறீதரன், 27734 வாக்குகளை பெற்று எம்.ஏ.சுமந்திரன், 23740 வாக்குகளை பெற்று த.சித்தார்த்தன் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு