தந்தையின் மரண சடங்கிற்கு உதவிக்காக வாங்கிய ஆட்டோவை மறைத்துவைத்துவிட்டு களவுபோனதாக நாடகமாடியவர் கைது..!

ஆசிரியர் - Editor
தந்தையின் மரண சடங்கிற்கு உதவிக்காக வாங்கிய ஆட்டோவை மறைத்துவைத்துவிட்டு களவுபோனதாக நாடகமாடியவர் கைது..!

தந்தையின் இறுதிக்கிரிகைகளுக்கு உதவியாக வழங்கிய ஆட்டோவை மறைத்துவைத்துவிட்டு களவுபோனதாக நாடகமாடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கண்டி புஸல்லாவ- நுகவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் தந்தை சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். 

மிகவும் வறுமைப்பட்ட குடும்பம் என்பதால் உயிரிழந்தவரின் இறுதி கிரிகைக்காக அப்பகுதியை சேர்ந்தவர் ஒருவர் ஆட்டோவை உதவியாக வழங்கியுள்ளார். 

பின்னர் சடலம் கடந்த 31ம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி உரிமையாளர் வண்டியை தருமாறு கேட்டபோது

சந்தேக நபரும் அவரின் ஏனைய சகோதரர்களும் முச்சக்கர வண்டியை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து முச்சக்கர வண்டி உரிமையாளரினால் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது 

கண்காணிப்பு கமராக்களை பரீட்சித்து பார்த்ததில் குறித்த முச்சக்கர வண்டி கம்பளைப் பிரதேசத்தில் செல்வதனை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது முதலில் மறுத்துள்ளார், பின்னர் முச்சக்கர வண்டியை தானே திருடியதாகவும் 

அதனை விற்பனை செய்வதற்காக பேராதனை கலஹா சந்தியில் வீடு ஒன்றில் மறைத்து வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்படி பொலிஸார் முச்சக்கர வண்டியை நேற்று முன்தினம் மாலை கைப்பற்றியதோடு குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

Radio