சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்திய பூனை சிறையிலிருந்து தப்பி ஓட்டமாம்..!

ஆசிரியர் - Editor
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்திய பூனை சிறையிலிருந்து தப்பி ஓட்டமாம்..!

மஹசீன் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்திவந்த பூனை சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி ஓடியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்படி பூனையினை சிறைச்சாலையில் உள்ள அறை ஒன்றில் தடுத்து வைத்திருந்த நிலையில் அறையிலிருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிறை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமையன்று பூனையின் கழுத்தில் சிறிய பொதி ஹெராயின் கட்டப்பட்டுள்ளதுடன் பொதிக்குள் கிட்டத்தட்ட 2 கிராம் ஹெராயின், 2 சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி காட் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

சிறைக்குள் ஹெராயின் கடத்த இந்த பூனை பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Radio