கன்னி உரையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைப்பு.

ஆசிரியர் - Editor I
கன்னி உரையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைப்பு.

புதிதாக பதவியேற்ற வடமாகாணசபை உறுப்பினர் ச.குகதாஸின் கன்னி உரையை ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வர னின் கருத்து சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


வடமாகாணசபை உறுப்பினர் இ.ஆனோல்ட் பதவி விலகிய நிலையில், அவருடைய இடத் திற்கு மாகாணசபை உறுப்பினர் ச.குகதாஸ் நியமிக்கப்பட்டார். இவர் இன்று தனது பதவி யை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றும் கொண்டார். 


இதனையடுத்து இந்று நடைபெற்ற மாகாணசபையின் 117வது அமர்வில் குகதாஸன் தன து கன்னி உரையை ஆற்றுகையில் போரின் இறுதி பகுதியில் போருக்குள் வாழ்ந்த ஒருவ ர் என்ற அடிப்படையில் போர் வலயத்திற்குள் மக்கள் மீது 


விமான குண்டு வீச்சுக்கள் நடந்தமை, பாடசாலைகள், வைத்தியசாலைகள் மீது விமான குண்டு வீச்சுக்கள் நடந்தமை மற்றும் சூட்டு தவிர்ப்பு வலயத்திற்குள் விமான குண்டு வீச் சு, எறிகணை தாக்குதல் நடந்தமை போன்ற விடயங்களையும், 


இராணுவ பகுதிக்குள் வந்த மக்களை இராணுவம் சுட்டமை தொடர்பாகவும் சுட்டிக்கா ட்டியதுடன் தாம் போருக்குள் நடந்த அனைத்து கொடுமைகளுக்கும் சாட்சி எனவும் கூறி னார். மேலும் போருக்கு வெளியே மக்கள் நலன்புரி முகாம்களில்,


தண்ணீர், உணவு இல்லாமல் விடப்பட்டு சாகடிக்கப்பட்டார்கள் எனவும் இந்த கொடுமை யை தமிழ் மக்கள் மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள் எனவும் இந்த கொடுமைகளுக்கு நீதியும், பொறுப்புகூறலும் வேண்டும் என்றார். 


இதனையடுத்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத் தின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் குகதாஸனின் உரை முக் கியத்துவம் வாய்ந்தது என கூறிய முதலமைச்சர் இந்த உரையின்


அவை குறிப்பை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். அதனை அங்கீகரித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு