இலங்கையில் சமூகமட்டத்தில் கொரோனா பரவல் ஆரம்பமா..? 2ம், 3ம் கட்ட பரிசோதனைகளுக்கு பின் தீவிர நடவடிக்கைகள் என்கிறது சுகாதார அமைச்சு..
லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். லங்காபுர பிரதேச செயலக அதிகாரியின் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமையை சுகாதார பிரிவு உறுதி செய்துள்ளது.
குறித்த நபருக்கு அருகில் நெருங்கி செயற்பட்டவர்களிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்டவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கவில்லை.
குறித்த நபர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரினால் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், மற்றுமொரு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.