SuperTopAds

பொதுஜன பெரமுன வேட்பாளர் உள்ளிட்ட 3 அரசியல்வாதிகளுக்கு மரண தண்டணை..! கொலை சம்பவம் தொடர்பில் 5 வருடங்களின் பின் தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
பொதுஜன பெரமுன வேட்பாளர் உள்ளிட்ட 3 அரசியல்வாதிகளுக்கு மரண தண்டணை..! கொலை சம்பவம் தொடர்பில் 5 வருடங்களின் பின் தீர்ப்பு..

பொதுஜன பெரமுன கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிறேம்லால் ஜயசேகர உள்ளிட்ட 3 அரசியல்வாதிகளுக்கு மரண தண்டணை விதித்து இரத்திரபுரி மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, 

கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்சன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.