சஜித் உள்ளிட்ட 115 பேரைக் கட்சியில் இருந்து நீக்கியது ஐதேக!

ஆசிரியர் - Admin
சஜித் உள்ளிட்ட 115 பேரைக் கட்சியில் இருந்து நீக்கியது ஐதேக!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை, கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுக்களை பெற்று போட்டியிடும் 54 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

அத்துடன், இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான கட்சியின் பணிகளில் ஒத்துழைக்காத, உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த 61 உறுப்பினர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும், சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட 99 பேரின் உறுப்புரிமையை இரத்துச் செய்ய, கடந்த மே மாதம் 29ஆம் திகதி, அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio