தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்...

ஆசிரியர் - Admin
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்...

 தோட்டங்களில் வேலை செய்வோர் போன்று பதிவு உள்ளவர்களுக்கும் வீடு....

 தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்...

 போலியான அரசியல் உறுதிமொழிகளுக்கு தோட்ட மக்கள் இம்முறை ஏமாறமாட்டார்கள்...

 சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் தோட்ட மக்களின் வாழ்வை வளப்படுத்துவது தொடர்பில் விசேட அவதானம்....

 ஜீவன் தொண்டமான் தோட்ட மக்களுக்கு உண்மையான அரசியல் தலைவன்....


- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்டதாக தோட்ட மக்களின் வாழ்வை வளப்படுத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தினூடாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹட்டன் நகரில் இன்று (2020.07.26) நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,

நான் இறுதியாக அமைச்சர் தொண்டமானை சந்தித்தது 2020.05.26ஆம் திகதி. அன்று அவர் என்னுடன் நிறைய விடயங்கள் பற்றி கலந்துரையாடினார். அமைச்சர் தொண்டமான் என்னுடன் இறுதி தினத்தில் கலந்துரையாடியவற்றை நான் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும். அவர் அந்த இறுதி தருணத்தில் என்னுடன் அந்த இறுதி நிமிடங்களை கழித்தது அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றி கதைக்க அல்ல, வருமானம் தொடர்பில் கதைக்கவும் இல்லை, அவருடைய சுக துக்கங்கள் பற்றி கதைக்கவும் இல்லை. இந்த தோட்டத்திலுள்ள உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி என்பது பற்றிதான் கதைத்தார். நான் தொண்டமானின் மூன்று பரம்பரைகளுடன் பணியாற்றினேன். அவர்கள் ஒவ்வொருவரதும் உரிமைகளை பெற்றுக் கொள்ளும் முறைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது. பாட்டனார் மற்றும் தந்தையின் முறைகளைவிட மிகவும் வேறுபட்ட முறையொன்றுதான் ஜீவனிடம் உள்ளது.

அவர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துமாறே பெரிதும் கேட்டுக் கொண்டார். நாங்கள் மூன்று சந்தர்ப்பங்களில் தோட்ட உரிமையாளர்களுடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அந்த பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தோட்ட உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜீவன் பேசியது தோட்டத் உரிமையாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தாதிருக்க முடியாத வகையிலேயே. 

தேர்தல் காலத்தில் சம்பள உயர்வு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் சட்டங்கள் இடையூறாக காணப்படுவதால் நாங்கள் தேர்தலின் பின்னர் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம்.  தோட்ட தொழிலாளர்களுக்கு முதலில் கொன்கிரீட் செய்யப்பட்ட வசதிகள் கொண்ட வீதிகள் 2005-2015 வரையான எமது ஆட்சிக் காலத்திலேயே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது . தோட்ட பிரதேசங்கள் பலவற்றில் நிறைய வீதிகளை கொன்கிரீட் செய்துக்கொள்ள அமைச்சர் தொண்டமானுக்கு முடியுமானதானது. 

அதுபோன்று லயம் அறை வீடுகள் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த வீட்டுத்திட்டம் குறித்து நிதி ஒதுக்கிக் கொண்டோம். முதல்முறையாக தோட்ட மக்களின் லயம் அறைகளை மின்சார ஒளியில் பிரகாசிக்க வைத்தது எமது காலத்தில் தொண்டமானின் தலையீட்டுடனேயே. நல்லாட்சி அரசாங்கம் வந்தவுடன் அமைச்சர் தொண்டமான் அறிந்திருந்தார், அந்த அரசாங்கத்தினூடாக இந்த தோட்ட மக்களுக்கு எதுவும் நடைபெறாது என்று. அதனால் தோட்ட மக்களுக்காக எந்நாளும் அரசாங்கம் அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் உதவி செய்த அமைச்சர் தொண்டமான் முதல் முறையாக நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையாது எம்முடன் அரசாங்கமொன்றை அமைக்கும்வரை தோட்ட மக்களுக்காக முன்நின்றார். நல்லாட்சி அரசாங்கத்தினால் தோட்ட மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது என அமைச்சர் தொண்டமான் தெரிந்திருந்ததனாலேயே நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையவில்லை.

அன்று நாம் ஏற்படுத்திய மாற்றத்தை, தோட்டப்புறங்களில் நாம் அமைத்த வீதிகள், பாடசாலைகளினால் இன்று தோட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் கொழும்பில் பல அரச நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 6 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுத்தோம். விஞ்ஞான பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகளில் இருந்து முன்னோக்கி வரும் பிள்ளைகள் இன்று தோட்டங்களில் காணப்படுகின்றனர். 

இந்த தோட்ட மக்களை தோட்டங்களுக்குள்ளேயே வைத்திருப்பது எமது நோக்கமல்ல. அங்கிருந்து வெளி உலகிற்கு அழைத்து செல்ல வேண்டும். நாங்கள் அந்த வெற்றியை தோட்ட மக்களுக்கு வழங்கி இருக்கிறோம். ஆனால் தோட்டங்களிலிருந்து வெளியே செல்லாதவர்களுக்கு, அங்கிருந்து வெளியே செல்பவர்களுக்கு கிடைக்கும் வசதிகள், கிடைக்கும் வருமானத்திற்கு சமமான வருமானம் பெறும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தற்போது எமக்கு எஞ்சியுள்ளது.

அடுத்ததாக நாம் செய்வதற்கு தயாராக இருப்பது அந்த பொறுப்பை நிறைவேற்றுவதே. தோட்ட மக்களை இவ்வளவு காலமும் அவ்வப்போது வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கமைய அவர்கள் பக்கம் இழுத்துக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அமைச்சர் தொண்டமான் ஒருநாளும் நாட்டை பிரிக்கும் அரசியல் நோக்கங்களுக்கு தோட்ட மக்களை ஈடுபட இடமளிக்கவில்லை. சிலர் கேட்கின்றனர் கொவிட் தொற்று காணப்படுகையில், அமைச்சர் தொண்டமானுக்கு மாத்திரம் சிறப்பு சலுகை செய்தது ஏன் என்று கேட்கின்றனர். 

நாம் அவ்வாறு ஏதும் சிறப்பு சலுகை செய்யவில்லை, பயங்கரவாதத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கவிருந்த தோட்ட மக்களை பாதுகாத்தது, அந்த பயங்கரவாதிகளின் வழியில் செல்லவிடாது பார்த்துக் கொண்டதும் அமைச்சர் தொண்டமான். மிகவும் கடினமான தருணத்தில் நாடளாவிய ரீதியில் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் தோட்ட மக்களுக்கு செய்யும் கௌரவமாக அவரது பூதவுடலுக்கு மரியாதை செலுத்த நாம் வாய்ப்பளித்தோம். சிறுபான்மையினரின் உரிமை தொடர்பில் எந்நேரத்திலும் பேசுகின்றவர்களும் இந்த காரணத்தை பெரிதுபடுத்தி எமக்கு எதிராக பேசுவது எனக்கு மனவருத்தம். அதுபோன்று போலி அரசியல் வாக்குறுதிகளுக்கு தோட்ட மக்கள் இம்முறை ஏமாறமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

அதுபோலவே தோட்ட வீடுகள் இதுவரை தோட்டங்களில் பணியாற்றியவர்களுக்கே வழங்கப்பட்டது. தோட்டத்தில் வசிக்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில்பெயர் பதியப்பட்டுள்ளவர்களுக்கும் வீடுகளை வழங்குமாறு தொண்டமான் அவர்கள் எங்களிடம் கோரினார். நாங்கள் அதை நிறைவேற்றிக் கொண்டு செல்கிறோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் தோட்டங்களை அண்மித்த மக்களின்வாழ்க்கையை வளப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தோட்ட மக்களுக்காக செய்த சேவையில் தற்போது அவரது மகன் ஜீவன் தொண்டமான் எங்களுடன் இணைந்துள்ளார். ஆறுமுகம் தொண்டமான் தலைமை வழங்கிய நுவரெலியா தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி செயற்படும் பொறுப்பு தற்போது ஜீவன் தொண்டமானுக்கு சென்றுள்ளது. தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்காலத்தில் ஜீவன் தொண்டமான் பேசுவார். தோட்ட மக்களுக்காக அவர் ஒரு சிறந்த தலைமைத்துவமொன்றை வழங்குவார் என நான் நம்புகிறேன்.

குறித்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு