மரண சடங்கிற்கு சென்றவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor
மரண சடங்கிற்கு சென்றவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..!

மரண சடங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற நபர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் இன்று பதுளை - பசறை வீதியில் அமைந்துள்ள வேவெஸ்ஸகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து உறவினர் ஒருவரின் 

மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற நபரே இவ்வாறு குளவிக் கொட்டிற்கிலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.