இந்திய உயர்ஸ்தானிகராலய செயலாளர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை..! சீ.சி.ரி.வி கமரா பதிவுகளுடன் தீவிர தேடுதல்..
இந்திய உயர்ஸ்த்தானிகராலய செயலாளரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் 2 ஆயிரம் அமொிக்க டொலர் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
பொரளை காசல் வீதியிலுள்ள குறித்த வீட்டினுள் நேற்று பிற்பகல் 01 மணியளவில் நுழைந்த நபர், அங்கிருந்து 2000 அமெரிக்க டொலர்களையும் 10,000 ரூபாவையும் கொள்ளையிட்டுள்ளது.
குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவராக இருக்கலாமென சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராவைப் பயன்படுத்தி
அவரைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.