தேர்தலை பிற்போடுமாறு கோருகிறார் சஜித்!

ஆசிரியர் - Admin
தேர்தலை பிற்போடுமாறு கோருகிறார் சஜித்!

அரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை தொடர்பில் அனைத்து தகவல்களையும் வெளியிடுவது அரசாங்கம் மட்டுமே எனவும் இந்த தகவல்களின் உண்மை தன்மை தொடர்பில் பாரிய சிக்கல் இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தலைமையிலான குழுவினர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று இது தேர்தல் நடத்துவதற்கு உகந்த காலம் இல்லை என தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Radio