ஊடகவியலாளரை அச்சுறுத்தி இழுத்துச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி!
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தி இழுத்துச் சென்று நீதிமன்ற பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
தன்னை ஊடகவியலாளர் என்று அடையாளப்படுத்திய போதும் அவர் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸ்சாவடியில் வைத்து தனது கெமராவில் இருந்த மெமரி கார்டுகளை எடுத்து கொண்டதாக ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியான முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ நீதிமன்றில் ஆஜராக வந்த போதே, உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் குறித்த ஊடகவியலாளர் அவரைப் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.