மோட்டார் சைக்கிளில் கொழுவி இருந்த பணப்பை திருட்டு..! தானே தேடி அலைந்து பையை மீட்டதுடன், திருடர்களை நெருங்கிய பெண்...

ஆசிரியர் - Editor
மோட்டார் சைக்கிளில் கொழுவி இருந்த பணப்பை திருட்டு..! தானே தேடி அலைந்து பையை மீட்டதுடன், திருடர்களை நெருங்கிய பெண்...

கொக்குவில்- கேணியடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பை திருடப்பட்ட நிலையில், பையை தொலைத்தவர்கள் நடத்திய தேடுதலின்போது வெறும் பை மற்றும் பையில் இருந்த தொலைபேசி ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காப்புறுதி நிறுவன ஊழியர் ஒருவர் வேலைக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிள் ஆவணத்தை எடுப்பதற்கு மறந்துள்ளார். உடனடியாக மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு

ஆவணத்தை எடுக்க சென்றபோது மோட்டார் சைக்கிளில் கொழுவப்பட்டிருந்த பை திருடப்பட்டது. அதற்குள் 1 லட்சம் ரூபாய் பணம், ஒன்றரை பவுண் நகை, மற்றும் தொலைபேசி ஆகியன இருந்துள்ளது. 

இந்நிலையில் திருடப்பட்ட பை தொடர்பாக  காப்புறுதி நிறுவன ஊழியரின் வீட்டார் தொடர்ந்து தேடிவந்த நிலையில் கொக்குவில் சம்பியன் வீதி பகுதியில் திருடப்பட்ட பை இருப்பது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. 

இதயைடுத்து அங்கு சென்று விசாரித்தபோது பையை திருடி சென்றவர்கள் பணம் மற்றும் நகையை எடுத்துக் கொண்டு தொலைபேசியுடன் பையை வீசிவிட்டு சென்றிருக்கின்றனர். 

இதனை அவதானித்த அப்பகுதியில் உள்ள இரும்பு வேலை செய்யும் கடைக்காரர் ஒருவர் பையை எடுத்து பார்த்தபோது உள்ளே தொலைபேசி இருந்துள்ளது. அதனை எடுத்து அவர் ஒரு இடத்தில் அடகுவைத்துள்ளார். 

இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் பையும், கைதொலைபேசியும் மீட்கப்பட்டிருக்கின்றது. மேலும் பணம் மற்றும் மோதிரத்தை சென்றவர்கள் தொடர்பான சில தகவல்கள் கிடைத்த நிலையில் அவர்களையும் தேடிவருகின்றனர்.