புலிகளின் பதுங்கு குழிகளின் கட்டுமானங்களை பார்வையிட்டு அதிசயித்த சஜித்!

ஆசிரியர் - Admin
புலிகளின் பதுங்கு குழிகளின் கட்டுமானங்களை பார்வையிட்டு அதிசயித்த சஜித்!

யாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார்.

தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்தார்.

விடுதலைப்புலிகளால் 1990ம் ஆண்டுகளில் முக்கிய படைமுகாமாக இருந்த அக்கட்டடத்தில் பாரிய சீமெந்து பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தது.

1996ம் ஆண்டு படையினரால் குடாநாடு கைப்பற்றப்பட்ட போது குறித்த முகாமும் கைப்பற்றப்பட்டு இராணுவ புலனாய்வு முகாமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் கொழும்பு முன்னணி வர்த்தக நிறுவன உடைமையாகியிருந்த இக்கட்டட தொகுதி நட்சத்திர விடுதியாக மாறியிருந்தது.

எனினும் விடுதலைப்புலிகளது பதுங்குகுழியினை இடித்தழிக்காது அதனை ஓவிய கண்காட்சி கூடமாக்கி விட்டது ஹோட்டல் நிர்வாகம்.

இந்நிலையில் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த சஜித் பதுங்கு குழி கட்டுமானத்தை பார்த்து அதிசயித்தார்.

குறித்த ஹோட்டலின் விருந்தினர் பகுதி புலிகளது பதுங்குகுழி மீதே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு