ஆட்சிக்கு வந்தவுடன் கருணாவை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்! - ரஞ்சித் மத்தும பண்டார

ஆசிரியர் - Admin
ஆட்சிக்கு வந்தவுடன் கருணாவை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்! - ரஞ்சித் மத்தும பண்டார

முன்னாள் பிரதி அமைச்சரான கருணாவை தாங்களே தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என்று, ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கருணாவை தாங்களே சீர்திருத்தினோம் என்றும், அதன் பின்னரே அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிக் கொண்டார் என்றும், அவர் கூறியுள்ளார்.

கருணாவுக்கு தாங்கள் வேறு எதனையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் தான் அவரை அரசியல்வாதியாக மாற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

கருணா தனது அறிக்கை தொடர்பாக உண்மையான விளக்கத்தை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்” என்றும் சூளுரைத்துள்ளார்.

Radio