மல வாசலில் பதுக்கிவைக்கப்பட்ட 300 மில்லி கிராம் ஹெரோயின்..! யாழ்.சிறைச்சாலையில் சந்தேகநபர் சிக்கினார்..

ஆசிரியர் - Editor
மல வாசலில் பதுக்கிவைக்கப்பட்ட 300 மில்லி கிராம் ஹெரோயின்..! யாழ்.சிறைச்சாலையில் சந்தேகநபர் சிக்கினார்..

யாழ்.சிறைச்சாலையில் உள்ள சந்தேகநபர் ஒருவருடைய மல வாசலில் இருந்து 4 பைக்கெட் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகரினால் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் சந்தேக நபர் யாழ்ப்பாணம் மறியல்சாலையில் இன்றிரவு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 300 மில்லிக்கிராம் ஹெரோயின் 4 பக்கட்டுக்களில் அடைக்கப்பட்டு அவரது மல வாசலில் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து சந்தேக நபர் மயக்கமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

Radio