SuperTopAds

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் திருமண ஜோடி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து விபத்து..! மணமகனை காணவில்லை, மணப்பெண் மீட்பு..

ஆசிரியர் - Editor I
திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் திருமண ஜோடி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து விபத்து..! மணமகனை காணவில்லை, மணப்பெண் மீட்பு..

எல்லே லக்கல சேர நீர்வீழ்ச்சியில் திருமண படப்பிடிப்பின்போது தவறி விழுந்த நிலையில் பெண் மீட்கப்படடுள்ளபோதும், ஆண் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். 

அடுத்த மாதம் நடைபெறவுள்ள திருமணத்திற்கு முன்னேற்பாடாக புகைப்படம் எடுப்பதற்கு நேற்று லக்கல செரஎல்ல நீர்வீழ்ச்சிக்கு இவர்கள் இருவரும் சென்றிருந்தனர்.

புகைப்படம் எடுக்கும் போது இவர்கள் இருவரும் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் யுவதியை காப்பாற்றியுள்ளதுடன் 

இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.இளைஞனை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.