கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழ்.ஏழாலையில் வீடு உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் 14 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓட்டம்..! தொடரும் கொள்ளை..

ஆசிரியர் - Editor
யாழ்.ஏழாலையில் வீடு உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் 14 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓட்டம்..! தொடரும் கொள்ளை..

கோப்பு படம்

யாழ்.ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் 14 பவுண் நகை மற்றும் பொருட்களை திருடி சென்றதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

ஏழாலை களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்று இன்று அதிகாலை திருடர்களினால் உடைத்து திருடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர். 

இதன்போது வீட்டில் இருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Radio
×