MCC ஒப்பந்தம் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

ஆசிரியர் - Admin
MCC ஒப்பந்தம் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

எம் சி சி உடன்படிக்கை தொடர்பில்  ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அறிக்கையின் பிரதியொன்று பிரதமரின் செயலாளர் காமினி செனரத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதகாலமாக இது குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும் இதன் போது பல்வேறு தரப்பினரினதும் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெறப்பட்டு அவை கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீண்ட ஆய்வின் பின்னர் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கூறுகின்றது.

மேலும் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையிலும் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் லலித ஶ்ரீ குணருவன்,போக்குவரத்து தொடர்பான நிபுணர் டி எஸ் ஜயவீர,ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்த்தன மற்றும் வாஸ்து நிபுணர் நாலக ஜயவீர ஆகியோரினாலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு