SuperTopAds

இராணுவத்தினர் வசமிருந்த ஒரு தொகுதி காணியும் கட்டங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் - Editor I
இராணுவத்தினர் வசமிருந்த ஒரு தொகுதி காணியும் கட்டங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த ஒரு தொகுதி காணியும் கட்டங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில்  தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாக சேவையில் நடுவப்பணியகம் இயங்கிய கட்டடங்கள் மற்றும் அதனோடு இணைந்த காணி என்பன கடந்த 2009ம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகள் படிப்படையாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இராணுவத்தினருக்கான உணவு விநியோக முகாமாக இயங்கி வந்த குறித்த காணி  அதனுடன் இணைந்து கட்டடங்கள் என்பவற்றில் இருந்து நேற்று மாலை (20-02-2018) இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காணியை பொறுப்பேற்றுக்கொண்ட கரைச்சி பிரதேச செயலகத்தினால் மேற்படி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.